வகைப்படுத்தப்படாத

சீனா செல்கிறார் ஆங் சான் சூகி

(UTV|MIYANMAAR)-மியன்மாரின் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி சீனாவிற்கான விஜயத்தை மெற்கொள்ளவுள்ளார்.

அந்த நாட்டின் அரச ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் மேற்கத்தேய நாடுகளால் மியன்மார் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களில் அந்த நாட்டின் இராணுவத்தினர் மேற்கொள்ளும் வன்முறைகளால் 6 லட்சத்து 50 ஆயிரம் வரையான ரோஹிங்ய முஸ்லிம்கள் பங்களாதேஸுக்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

ஆனாலும் சீனா தொடர்ந்து மியன்மாருக்கு ஆதரவளித்து வருகிறது.

குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் மியன்மாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்றையும், சீனா நீக்கி இருக்கிறது.

இவ்வாறான நிலையிலேயே அவரது சீன விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று

තලවකැලේ නගරයේ වෙළඳසැල් හදිසි පරීක්‍ෂාවකට