உலகம்

சீனாவில் வைத்தியசாலை ஒன்றில் தீ விபத்து – 20 பேர் பலி

வட சீனாவில் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சின்ஹுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் (112 மைல்) தொலைவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள செங்டே நகரில் வைத்தியசாலையிலேயே செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தை அடுத்து வைத்தியசாலையில் இருந்தவர்கள் மேலதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

Related posts

ஆண்மைக்கு கேள்விக்குறியாகும் சீனாவின் ‘புருசெல்லா’ தொற்று

உக்ரைன் மீது தொடர் தாக்குதலால் ரஷியாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜி-7 நாடுகள் ஆலோசனை

கொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்