உலகம்

சீனாவில் புதிதாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | சீனா) – சீனாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 27 பேர் புதிதாக இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 32 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து நாளொன்றுக்கு 4 இலட்சம் பேர் வரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 83,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4,634 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரொனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்தை அடுத்து சீனாவில் திறக்கப்பட்டுள்ள நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்களை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை 30 சதவீதமாக அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் 2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கனடா – பிரிட்டன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்!

ஹூதிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள்: விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார்