சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இன்று வியாழக்கிழமை (04) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் உள்நாட்டு நேரப்படி, பிற்பகல் 3.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு அலுமாரிகளிலிருந்து பொருட்கள் விழுந்ததாகவும் அதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
