உள்நாடு

சீனாவில் உள்ள 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாத நிலை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவிச் செல்லும் சீனாவின் வூஹான் நகருக்கு உள்நுழையவோ அங்கிருந்து எவரும் வெளியே வருவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதனால் அங்கிருக்கும் 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாமல் இருப்பதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும் அங்கிருக்கும் இலங்கை மாணவர்களின் சுகாதார நிலை, உணவு, ஏனையத் தேவைகள் குறித்து பீஜிங் நகரிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் ஊடாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித் பிரேமதாச

editor

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

நாடாளுமன்றத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் : சிக்கிய மேலும் சிலர்