உள்நாடு

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – சீனாவில் கல்வி கற்றுவரும் இலங்கை மாணவர்கள் 66 பேர் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சீன விமான சேவை நிறுவனம் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் அவர்கள் நேற்று (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை சீனாவில் கல்வி கற்கும் மேலும் 110 மாணவர்கள் இன்று (29) இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான பதில் தூதவர் கே.கே யோகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 380 மாணவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 484 பேர் தொடர்ந்தும் அங்கு இருப்பதாகவும் அவர்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் எம்.பி லலித் எல்லாவல

editor

மன்னாரிற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர

editor

20000 ரூபா வழங்கி வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டம் – சஜித்

editor