உலகம்

சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம்

(UTV|சீனா) – கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சீனாவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 25 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகநாடுகளில் பரவியுள்ள குறித்த கொரோனா வைரஸானதும் தற்போது கொங்கொங், மக்காவு, தைவான், தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக பல நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா – சர்ச்சையில் டிரம்ப்

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம்

கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய கருவி