வகைப்படுத்தப்படாத

சீனாவின் நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட மறுப்பு?

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நங்கூரமிடச் செய்வதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின்படி இலங்கையில் ஒரு மாத காலத்துக்கு தமது நீர்மூழ்கி கப்பலை நங்கூரமிடச் செய்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

ஆனால் இதற்கான கோரிக்கையை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு ஒக்டோர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு

சூப்பரான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது