உள்நாடு

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

(UTV | கொழும்பு) – சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதனை தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக சில பசளை மாதிரிகளும் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

எனினும், இந்த பசளை மாதிரிகள் தொடர்பில் விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், குறித்த பசளை இலங்கையின் மண்வளத்துக்கும், காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிரிகள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டது.

இது தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு மற்றும் அமைச்சர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்த அதேவேளை, குறித்த மாதிரிகள் பரிசோதனைக் கூடத்துக்குக் கிடைக்கப்பெற்றபோது, அவை திறந்த நிலையில் காணப்பட்டதாக சந்தர்ப்பமொன்றில் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அம்பியூலன்ஸ்களுக்கான அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor