உள்நாடு

சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியாது

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸின் தொற்றுக்கு இலக்காகி, கொழும்பு தொற்று நோய் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து உடனடியாக விடுவிக்க முடியாது என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் குறித்த சீனப் பெண்ணின் உடல் நிலை தொடர்பான பல சோதனை முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.

எவ்வாறாயினும், கேள்விக்குரிய சீனப் பெண் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், எனவே அவரை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் குறித்த பெண்ணை வைத்தியசாலையிலிருந்து விடுவிப்பதற்கான திகதியை தற்போது அறிவிக்க முடியாது என்றும் ஐ.டி.எச் வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா? மீண்டும் இனவாதத்தை தூண்ட முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

பொதுத் தேர்தல் – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்படி ஒரே அணியில் போட்டியிடவுள்ளோம் [VIDEO}

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!