உள்நாடு

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை!

(UTV | கொழும்பு) –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் திலீபனின் 33ஆவது நினைவு தினம் 2020 ல் நடைபெற்றது.

நீதிமன்ற தடையை மீறி அன்றைய தினம் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டில் சிவாஜிலிங்கம் உரும்பிராய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 2020 செப்டம்பர் 15 ம் திகதி கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்திருந்தது. இந்நிலையில் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்பு தொடர்பில் ஆராய நெதர்லாந்திலிருந்து விசேட குழு

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை

editor