உள்நாடு

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இவ்வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தை, சுகாதார வழிகாட்டலுக்கு உட்பட்டு யாத்திரிகர்களின் பங்களிப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட பிரதம பீடாதிபதி வண. பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லதண்ணியில் நேற்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், கொரோனா தடுப்பூசி அட்டையைக் கொண்டு வருவதன் மூலம் யாத்திரிகர்கள் எவ்வித தடையுமின்றி சிவனொளிபாத மலைக்குப் பிரவேசிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில், ஆண்டுதோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகர்கள், இன, மத வேறுபாடின்றி சிவனொளிபாத மலையை தரிசிப்பது வழக்கமாகும்.

எனினும், கொவிட் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வழமை போல யாத்திரைகளை மேற்கொள்ள யாத்திரிகர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor

இ.தொ.கா வின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

editor

பிரதமர் தினேஷ் – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு.

editor