உள்நாடு

சிவனொளிபாதமலை யாத்திரை டிசம்பர் 4 ஆம் ஆரம்பம்!

சிவனொளிபாதமலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி (உந்துவப் பெளர்ணமி தினத்தில்) ஆரம்பமாகும் என சிவனொளிபாதமலையின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் தெரிவித்ததார்.

சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (29) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிவனொளிபாதமலை யாத்திரை, எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி ஆரம்பமாகி, 2026ஆம் ஆண்டு மே மாதம் வரும் வெசாக் போயா தினத்துடன் நிறைவடையும்.

பெல்மதுளை கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையின் விசேட அறையில் வைக்கப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி மாலை விசேட அறையில் இருந்து வெளியே எடுத்து பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படும்.

அதற்கு மறு நாளான டிசம்பர் மாதம் 03ஆம் திகதி அதிகாலையில், சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் நான்கு வழிகள் ஊடாக சிவனொலிபாதமலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.

இரத்தினபுரி – பலபத்தல வீதி குருவிட்ட – எரத்ன வீதி ஹட்டன் – மஸ்கெலியா வீதி பலாங்கொடை – பொகந்தலாவை ஆகிய நான்கு வீதி வழியாக பெரஹெர மூலம் தெய்வ ஆபரணங்கள் சிவனொளிபாதமலை எடுத்துச் செல்லப்படும்.

சிவனொளிபாதமலை யாத்திரை டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முற்பகலில் இருந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

மேற்படி யாத்திரையை அடுத்த வருடம் 2026 மே மாதம் வரும் வெசாக் போயா தினத்துடன் நிறைவடையும்.

அப்போது ஸ்ரீ பாதையில் வைக்கப்பட்டிருந்த சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் மீண்டும் பெல்மதுளை கல்பொத்தாவெல ரஜமஹா விகாரைக்கு எடுத்துச் செல்லப்படும்.

மேற்படி கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாநகர சபையின் மேயர் இந்திரஜித் கட்டுக்கம்பல, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.ஏ.கே. சுனிதா, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகிறது

editor

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்