உள்நாடு

சில பாடசாலைகளுக்கு விடுமுறை – வெளியான புதிய அறிவிப்பு

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகின்றது.

பொசன் வாரத்துடனான நிகழ்வுகளை முன்னிட்டு இன்று (07) முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரம் நகரை அண்மித்த 12 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொசன் வாரமானது இன்று (07) முதல் 13 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேசிய பொசன் நிகழ்வை முழுமையான அரச அனுசரணையுடன் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Related posts

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர நியமனம்

editor

அரச சபை கட்டிடம் : பிடியாணை இடைநிறுத்தம்

ரமழானை வரவேற்க முதல் அடியை எடுத்து வைக்கும் யூ.டீ.வி இனது கிராத் முறத்தல் போட்டி நாளை முதல்