உள்நாடு

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) –  இன்று(17) இரவு 09 மணிமுதல் காலை 10 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால்கள் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொட்டாவ – பெலன் வந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணி காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெலன்வந்த, எரவல்ல, சத்தமுல்ல, பிங்ஹேன, கொரகப்பிட்டிய, மொரகெட்டிய, நிவன்பிடிய ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, வாதுவ, களுத்துறை பகுதிகளிலும் இன்று இரவு 08 மணிமுதல் 11 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாஸ்கடுவ, வாதுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்ட, அளுத்கம, தர்கா நகர் , களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பகுதிளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு

editor

“சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி கேட்கவில்லை” – ஹார்பர் மாஸ்டர்