உள்நாடு

சில தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – பாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பாணந்துறை – மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(09) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பேருந்து ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

எட்டு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!