சூடான செய்திகள் 1

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும்புத்தளம்மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என தெரிவித்துள்ளது.

Related posts

இலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு

மழையுடன் கூடிய காலநிலை

வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்