உள்நாடு

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

(UTV|கொழும்பு) – வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக விருத்தியடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது தற்போது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இன்று(16) விரைவாக ஒரு சூறாவளியாக விருத்தியடைவதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க ரணில் இணக்கம்- ஜீவன்

பிசிஆர் பரிசோதனையை குறைக்க எதிர்பார்ப்பு இல்லை

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!