சூடான செய்திகள் 1

சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, மாத்தளை, நுவரெலியா, அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

பெண்ணின் வயிற்றில் 19.5Kg நிறையுள்ள கட்டி – வெற்றிகரமாக அகற்றி சாதனை

வசந்த கரன்னாகொட – ரொஷான் குணதிலக ஆகியோரது பதவி நிலைகளில் உயர்வு