உள்நாடு

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO ) – கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை வீழ்ச்சி பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று – நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

இன்று கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு!

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கை அரசு ரிஷாதை தடுத்து வைத்திருப்பதன் நோக்கம்?