கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேம சந்திர அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது,
முதலில் நான் ஒரு விடயத்தை கூற வேண்டும்.. இங்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக மட்டுமல்ல… ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே அனைவரும் இணைந்துள்ளார்கள்.
என்னை எடுத்துக் கொண்டால் நான் ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயக விரோத கொள்கைகளுக்காக போராடியவள் இன்னும் போராடுவேன்..
முன்னாள் ஜனாதிபதியை மத்திய வங்கியை கொள்ளையடித்தது தொடர்பான விடயத்தில் கைது செய்யுமாறு நானும் தெரிவித்துள்ளேன்..
அதற்காக இன்று அவரை கைது செய்து இருந்தால் தற்போது இந்த கைதுக்கு எதிராக இவ்வளவு எதிர்ப்பு கிளம்பி இருக்காது..
நான் இப்பவும் சொல்வது முடியும் என்றால் ரணில் விக்ரமசிங்கவை மத்திய வங்கி கொள்ளை விடயத்தில் கைது செய்யவும்.
ஆனால் இவரை கைது செய்துள்ளது ஒரு சில்லறை விடியத்துக்காக..
இதற்கு முன்னரும் சரி இந்த ஜனாதிபதியும் சரி அரச பயணத்தின் போது தனிப்பட்ட பயணங்கள் செல்வது பல நிகழ்வுகள் நடந்துள்ளன.. தற்போது ஜனாதிபதி ஜெர்மன் செல்லும் போதும் தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டார்.