உலகம்

சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் மோதல்

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில்

மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு