இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி அதிகாலை சிலாவத்துறை அரிப்பு பகுதியில், நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள நூற்று ஒரு (101) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்படி, 2025 ஜூலை 29 ஆம் திகதி அதிகாலை சிலாவத்துறை அரிப்பு பகுதியில் வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகள் இணைந்து நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் விற்பணைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நாற்பத்து மூன்று (43) சந்தேகத்திற்கிடமான பொதிகள் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
அங்கு, குறிப்பிட்ட பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் நூற்று ஒரு (101) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சா (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரின் நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா இருப்பின் மொத்த தெரு மதிப்பு இருபது (20) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.