சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த புதன்கிழமை (27) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.அஸ்வர்கான் தலைமையிலும் அருட் சகோதரி ரி.தர்ஷினி பெரேராவின் நெறிப்படுத்தலுடனும், ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவர் பி. பிரபாகரன் ஆசிரியரின் மேற்பார்வையிலும் மேற்படி நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக சிலாபம் கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பணிப்பாளர் ஜெ. ஹனிதா, கௌரவ அதிதியாக அருட்தந்தை விநோதன் பிரான்சிஸ் குலாஸ் அடிகளார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் டி.நிஷா பெர்னான்டோ மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ரி.சதீஷ் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான தலைவர்களும், இடைநிலை மற்றும்
சிரேஷ்ட மாணவர்களுக்கான தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டு குறித்த மாணவர்களின் பெற்றோர்களின் கரங்களால் சின்னம் அணிவிக்கப்பட்டது.
சிரேஷ்ட மாணவத் தலைவனாக டி. லோகேஷ் மற்றும் சிரேஷ்ட மாணவ தலைவியாக எஸ்.ஹரிஸ்ரீ ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன், ஆரம்ப பிரிவின் சிரேஷ்ட மாணவ தலைவனாக கே. அன்ரூ மற்றும் ஆரம்ப பிரிவின் சிரேஷ்ட மாணவ தலைவியாக ஆர். சகஸ்தி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மாணவ தலைவர்களுக்கான சின்னத்திற்கு திருஞான பிரகாசம் நதியா எப்.எம்.உரிமையாளர் மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவத் தலைவர்களுக்கான மேலங்கி வழங்கிய 1997 ஆம் ஆண்டு சாதாரண தரமானவர்கள் மற்றும் ஸ்டார் டெய்லர் உரிமையாளர் திருவாளர் கனகலிங்கம் கிருஷ்ணா ஆகியோரும் அனுசரணை வழங்கினர்.
-ரஸீன் ரஸ்மின்