உள்நாடுபிராந்தியம்

சிலாபம், புத்தளம் வீதியில் விபத்தில் சிக்கிய பஸ்

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்து, பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்தது.

இந்த விபத்து காரணமாக, சிலாபம் – புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம் – மூவர் கைது

editor

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்