அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து அவரை சிறைச்சாலை பேருந்தில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடம்

பதவியை இராஜினாமாச் செய்தார் மருத்துவர் ஜயங்க திலகரத்ன

editor