வகைப்படுத்தப்படாத

சிறைச்சாலை பேருந்தில் இடம்பெற்ற படு கொலை சம்பவம்: சகோதரர்களின் வழக்கு பிற்போடப்பட்டுள்ளத

(UDHAYAM, COLOMBO) – சிறச்சாலை பேருந்தில் வைத்து படு கொலை செய்யப்பட்ட அருணா தமித் உதயங்க என்ற பாதாள உலகக் குழு தலைவரான ‘சமயங்” என்பவரின் சகோதரர்கள் என கூறப்படும் 2 சந்தேக நபர்களின் வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை குளியாப்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருந்த போதும், அந்த வழக்கு எதிர்வரும் சில நாட்களுக்கு பிற்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் பாதுகாப்பு தொடர்பில் உள்ள பிரச்சினை காரணமாகவே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் மர்மம்-5 வருட நினைவு கூறல்

காலி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு