உள்நாடு

சிறைச்சாலை திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வௌியேற 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளா​னோரின் எண்ணிக்கை 159 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய வெலிக்கடை, வெலிக்கடை மகளிர் பிரிவு, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் அதிகாரிகள், சிறைச்சாலைகளில் இருந்து வௌியேற முடியாது.

இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளாகிய கைதிகள் கந்தக்காடு சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெற்றிடமாகவிருந்த வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையை தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனிடையே, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 25 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்தார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!