அரசியல்உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சம்பளம் பாதியாக குறைப்பு – அமைச்சரவை அனுமதி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

மேலும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்க, தனது வழக்கமான பதவியின் கடமைகளுக்கு மேலதிகமாக பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையின் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் – IMF எச்சரிக்கை

ஊழலுக்கு கைகோர்க்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித்

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்