வகைப்படுத்தப்படாத

சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

(UTV|GERMANY)-ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத வகையில் வான்வெளியில் ஒன்றோடொன்று நேருக்குநேராக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு விமானி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

 

Related posts

தேயிலை தோட்டத்தில் பிடிப்பட்டுள்ள இராட்சதன்!!

சிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்

டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவுக்கு விஜயம்