கேளிக்கை

சிறந்த இந்திய திரைப்படமாக ‘கர்ணன்’ தெரிவு

(UTV |  பெங்களூர்) – பெங்களூர் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த நிலையில், குறித்த அங்கீகாரத்தை கர்ணன் திரைப்படம் பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை சிறந்த தென்னிந்திய திரைப்படத்திற்கான விருதை இ.வி.கணேஷ் பாபு இயக்கிய கட்டில் என்ற திரைப்படம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

26 ஆண்டுகளுக்கு பிறகு அனில்கபூருடன் மாதுரி

இளம் நடிகருடன் இணையும் நயன்தாரா

இளைய தளபதியை தொடர்ந்து உலக நாயகன்