உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுங்கு விசாரணையில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்ததன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்தபோது, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக கடமையாற்றினார்.