வகைப்படுத்தப்படாத

சிரியா பள்ளிவாசல் மீது அமெரிக்கப் படை வான் தாக்குதல்!! 40-க்கும் அதிகமானோர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – சிரியாவில் ஒரு பள்ளிவாசல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் இந்த பள்ளிவாசல் அமைந்திருக்கிறது.

இதன் மீது குண்டுகள் வீசப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

இந்தத் தாக்குதலில் 40-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் 300 க்கும் அதிகமானோர் பள்ளிவாசலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவம், பள்ளிவாசலை குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறியுள்ளது.

அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய ரகசியக் கூட்டத்தின்மீதே குண்டுகள் வீசப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் விளக்கமளித்துள்ளது.

பள்ளிவாசலை சுற்றி ஏராளமான சடலங்கள் சிதறிக் கிடப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதால், அமெரிக்க ராணுவத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Scroll down to watch the video….

[ot-video][/ot-video]

Related posts

Marilyn Manson joins “The Stand” mini-series

තැපැල් වර්ජනය තවදුරටත්

மட்டகளப்பு-ஏறாவூர் நகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்!