வகைப்படுத்தப்படாத

சிரியாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்

(UTV|COLOMBO) – சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி இராணுவம் தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது. இந்த கொடூர தாக்குதல்களில், குர்து போரளிகள் மற்றும் அப்பாவி மக்கள் என மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

உலக நாடுகள் துருக்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் பேரிழப்புகளை தவிர்ப்பதே தனது முதல் பணி என பென்ஸ் தெரிவித்தார்.

துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தெற்கே உள்ள ஒரு பாதுகாப்பு வளையத்திலிருந்து குர்திஷ் போராளிகளை திரும்பப் பெறுமாறு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குர்து போராளிகளும் இந்த போர்நிறுத்த ஒப்பந்ததத்திற்கு கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

Related posts

சர்வதேச வெசாக் தின வைபவம் இன்று ஆரம்பம்

දිස්ත්‍රික්ක හතකට නායයෑම් අනතුරු ඇඟවීම්

5,705 Drunk drivers arrested within 22-days