உள்நாடு

சிசிர மெண்டிஸிடமிருந்து சாட்சியம் கோரப்போதில்லை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸிடம் சாட்சியம் கோரப்போவதில்லையென சட்டமா அதிபர் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிசிர மெண்டிஸ் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

எனினும், அவர் சாட்சியமளிக்க அழைக்கப்படமாட்டாரென சட்டமா அதிபர் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஆயம் ஒத்திவைத்துள்ளது.

Related posts

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

இலங்கையில் – பலஸ்தீனுக்காக கண்கலங்கி பேசியவர்தான் ஈரான் ஜனாதிபதி! (சிறு அறிமுகம்)

அரசுக்கு எதிரான SJB தலைமையில் இன்று கொழும்பில் மாபெரும் பேரணி