உள்நாடு

சிங்கராஜ வனப்பகுதி – வீதி நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – உலக மரபுரிமை வனப்பகுதியான சிங்கராஜ வனத்தின் எல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இதற்கு உரிய பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கராஜ வனத்தின் எல்லையில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

8 அடி அகலமான கொங்ரீட் வீதி இதுவரை அங்கு காணப்பட்டதுடன், அதனை 12 அடி அகலமாக விஸ்தரித்து புதிய வீதி நிர்மாணிக்கப்படுவதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படும் பட்சத்தில், அதுகுறித்து மீளாய்வு செய்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே குறிப்பிட்டார்.

Related posts

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி!

பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட வியாழேந்திரன்

editor

ஊரடங்கு தளர்வு தொடர்பிலான அறிவித்தல்