வகைப்படுத்தப்படாத

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் சிங்கப்பூர் அரசின் பல்வேறு உதவித்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு சென்ற  சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் மத்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நல்லிணக்க செயற்பாடுகள், வாழ்வாதார உதவிகள், காணிவிடுவிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் ஆளுனர் இதன்போது அவருக்கு விளக்கமளித்துள்ளார்.

Related posts

முன்பள்ளிக்கு முக்கியத்துவம் அமைச்சர் திகா – [PHOTOS]

Rajasinghe Central and Azhar College win on first innings

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி!