உள்நாடு

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) –இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இக்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.

அத்துடன், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

முச்சக்கர வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

editor

நாட்டின் பிரச்சினைகளுக்கு முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே தவிர சீர்குலைப்பது எமது நோக்கமல்ல – சஜித்

editor

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor