அரசியல்உலகம்விசேட செய்திகள்

சிங்கப்பூரில் சஜித் பிரேமதாசவை சந்தித்த கிஷோர் மஹ்பூபானி

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு. கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று இன்று (19) நடைபெற்றது.

கொள்கை வகுப்பு, நிர்வாகம் மற்றும் சமாதானத்தை கட்டியமைத்தல் ஆகிய தலைப்புகளில் இரு தரப்பினரும் முக்கியமாக விஷேட கலந்துரையாடல்களை நடத்தினர்.

இதில், சிங்கப்பூரின் பொருளாதார மாற்றத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் இரண்டும் ஒரு வலுவான கொள்கை வகுத்தல் செயல்முறையின் விளைவாகும் என்று சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார்.

எனவே, சிங்கப்பூரின் அனுபவத்திலிருந்து இலங்கை பல தனித்துவமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும், பயனுள்ள மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை வகுக்கும்போதும் அவர்களின் திறனை மேம்படுத்துகின்ற போதும் இலங்கையின் அரச தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் தமது நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்வதில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் திரு. கிஷோர் மஹபூபானியிடம் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல நடைமுறைப் பாடங்கள் உள்ளன என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், இலங்கைக்கு வருகை தந்து கொள்கை வகுப்பாளர்களுடன் நேரடியாக ஈடுபடுமாறு திரு. கிஷோர் மஹாபூபானிக்கு கௌரவமான அழைப்பை விடுத்தார்.

இவை தவிர, இரு தலைவர்களும் அமைதி, சமாதானம் மற்றும் சமூக நீதியின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினர்.

நேர்மை, உள்ளடக்கம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றுடன் நிலைத்தன்மை இணைந்து செல்ல வேண்டும் என்றும், பொருளாதார வளர்ச்சி அனைத்து குடிமக்களுக்கும் பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

கிஷோர் மஹபூபானி ஒரு பிரபலமான சிங்கப்பூர் இராஜதந்திரியும் கல்வியலாளரும் எழுத்தாளருமாவார். அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிங்கப்பூரின் நிரந்தர பிரதிநிதியாகவும், இரண்டு முறை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் லீ குவான் யூ பொதுக் கொள்கைக் கல்லூரியின் ஸ்தாபக பீடாதிபதியாகவும், தற்போது ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு உறுப்பினராகவும் கடமையாற்றுகிறார்.

Related posts

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி

மக்கள் இல்லாத சரத் பொன்சேகாவின் பிரச்சாரக் கூட்டம்

editor

தேர்தலுக்கான திகதி 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்.