அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | சிங்கப்பூரின் A*STAR நிறுவனத்தின் உத்வேகத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கு சஜித் பிரேமதாச கலந்துரையாடல்

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,​​சிங்கப்பூர் அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (Agency for Science, Technology and Research -A*STAR)விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ASTAR நிறுவகத்தின் பிரதம சர்வதேச கூட்டாண்மை அதிகாரி கிறிஸ் லேக் (Chris Leck) மற்றும் சிரேஷ்ட உதவி பணிப்பாளர் எல்வின் சியா ஆகியோரைச் சந்தித்தார்.

இங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கான (Sri Lanka Agency for Science Technology and Innovation) பிரத்தியேகமான உயர் நிறுவகமொன்றை தான் ஆட்சிக்கு வந்ததும் ஸ்தாபிப்பேன் என்று A*STAR பிரதிநிதிகள் மத்தியில் தெரிவித்தார்.

A*STAR இல் தான் வாசித்தறிந்த, கேட்ட மற்றும் நேரில் அவதானித்தவைகளை ஒன்றிணைத்து, இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு நிறுவன ரீதியிலான கட்டமைப்பின் அவசியத்தை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கான இலங்கை நிறுவகமொன்றை ஸ்தாபிக்கும் யோசனையை முன்வைத்தார்.

இலங்கையில் தற்போது பல்வேறு நிலைகளில் பிரிந்து, நிதி பற்றாக்குறையால் அவதிப்படும் மற்றும் முறையான நிறுவன ஒருங்கிணைப்புகள் இல்லாத பல ஆராய்ச்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்த உத்தேச நிறுவகம் தொடர்பில் அவசர கவனம் செலுத்த வேண்டும்.

இங்கு முக்கிய துறைகளாக வேளாண் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் இயலுமை, அரிசி, தேயிலை மற்றும் தேங்காய் ஆராய்ச்சி, அறுவடைக்குப் பிந்தைய மற்றும் செயலாக்கம், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம், சில்லறை விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் சில தயாரிப்புகளின் சிறப்பு விநியோகம், வெப்பமண்டல சுகாதாரம், உயிரி மருத்துவ அறிவியல், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகளுக்கான உயர் தர உற்பத்தி, மின்னணு கருவிகள், துல்லியமான கருவிகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள், அரச தொழில்நுட்பம், ஸ்மார்ட் விநியோகம், பேரிடர் முன்னறிவிப்பு போன்ற பரப்புகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு எடுத்துரைத்தார்.

அவ்வாறே, A*STAR இன் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படும் மாதிரிகள், வலுவான அரச ஒத்துழைப்பு, தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் பாலான முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் விடயங்களை எடுத்துரைத்தார்.

இந்தியாவில் CSIR மற்றும் தென் கொரியாவில் KIST போன்ற இதை ஒத்த நிறுவனங்களும் காணப்படுகின்றன என்றும் எடுத்துக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த மாதிரிகளில் இருந்து இலங்கை கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கு சிங்கப்பூரின் நிலையான முதலீட்டிற்காக, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% அரசாலும், மேலும் 1% தனியார் துறையாலும் பங்களிப்புச் செய்யப்படுகின்றன.

தெளிவான தேசிய தொலைநோக்குப் பார்வை மற்றும் வலுவான நிறுவனங்களுக்கு உயர் மதிப்புள்ள பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த மாதிரியை இலங்கை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

நாட்டில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் வரி செலுத்த வேண்டுமா?

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

இன்று மாலை ரஞ்சனுக்கு புதிய பதவி