அரசியல்உள்நாடு

சிக்கலில் அர்ச்சுனாவின் எம்.பி பதவி – அடுத்து என்ன நடக்கும்?

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச சேவையிலிருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அது தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அரசியல் சாசனத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

Related posts

வருமானத்தை இழந்துள்ள பேரூந்து ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவம் – நீரில் மூழ்கி இறந்த நபருக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே

editor

பிறப்புச் சான்றிதழ் நகல்களின் செல்லுபடியாகும் காலம் குறித்த புதிய தீர்மானம்