உள்நாடு

சிஐடி அருகே ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் கைதான இரு இராணுவ அதிகாரிகள்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் சென்றபோது கைது செய்யப்பட்ட இருவர் கோட்டை பதில் நீதிவானால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட இருவரும் இலங்கை இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் அதிகாரிகள் என்று கோட்டை பதில் நீதிவான் லஹிரு சில்வாவிடம் தெரிவித்ததால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

பொலிஸ் தலைமையகம் முன்னர் அமைந்திருந்த வீதியின் முன்பாக சிவில் உடையில் கறுப்புத் துணியால் ஸ்னைப்பர் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தபோது இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது.

பின்னர், இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், பயிற்சி ஒன்றிலிருந்து திரும்பும் போது இரண்டு அதிகாரிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த உண்மைகளை முன்வைத்த பின்னர், கோட்டை பதில் நீதிவான், இரண்டு அதிகாரிகளையும் சம்பந்தப்பட்ட இராணுவப் பிரிவின் கட்டளை அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.

இஙர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என்றும் பொலிஸார. நீதிமன்றத்துக்கு மேலும் தெரிவித்தனர்.

இலங்கை இராணுவத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேலும் கூறுகையில், சந்தேக நபர்கள் இருவரும் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து திரும்பி வருவதாகவும், அவர்கள் இருவரும் துப்பாக்கிகளை வைத்திருக்க சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related posts

தலாவ பஸ் விபத்து – சாரதிக்கு விளக்கமறியல் – நடத்துனருக்கு பிணை

editor

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்

ஞாயிறு வரைக்கும் சமையல் எரிவாவு இல்லை