அரசியல்உள்நாடு

சாலி நளீம் எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாலி நளீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தான் பதவி விலகுவதாக சாலி நழீம் நேற்று (14) விசேட உரையொன்றை நிகழ்த்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

கடந்த 24 மணித்தியாலயத்தில் 502 : 03 [COVID UPDATE]

இன்று மாலை பொரளையில் துப்பாக்கிச் சூடு

editor