வகைப்படுத்தப்படாத

சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா வெளிநடப்பு

(UTV|PAKISTAN)-சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும்.

அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக உயரதிகாரி சுபம் சிங் கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியின் மந்திரி சவுத்ரி முஹம்மது சயீத் இந்த மாநாட்டு அரங்கத்தில் இருந்தார்.

அவரது வருகைக்கு இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மாநாட்டில் இருந்து சுபம் சிங் வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அனுப்பிய அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தானில் அப்போது நடப்பதாக இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த அமைப்பில் பங்கேற்றுள்ள வங்காளதேசம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் கடந்த சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது எனலாம்.

Related posts

கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி 66 பேர்உயிரிழப்பு

Windy condition to reduce from today

දිස්ත්‍රික්ක හතකට නායයෑම් අනතුරු ඇඟවීම්