சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும் அம்சங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி வாசிகளான உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்வேறு நபர்கள் உங்கள் வீட்டையும் உங்கள் சொத்துகளையும் திருடுவதைத் தடுக்க பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
1.உங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்களை நிறுத்தும் போது வாகனத்தின் சாவியை உங்களுடன் வைத்திருப்பதை உறுதி செய்து அதை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள்.
2.துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் போது அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
3.உங்கள் பசுக்கள் மற்றும் பிற கால்நடைகளைப் பாதுகாப்பாக வேலியிட்டு அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கவும்.
4.வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி சாவியை உங்களுடன் வைத்திருங்கள். அவற்றை ஒரு போதும் பாதுகாப்பற்ற இடங்களில் விட்டுச் செல்ல வோண்டாம்.
5.தங்கப் பொருட்களை சேமித்து வைக்கும் போதும் கொண்டு செல்லும் போதும் கவனமாக இருங்கள் குறிப்பாக இந்த நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், நீங்கள் பாதையில் நடந்து செல்லும் போது சந்தேகத்திற்கு இடமான நபர்கள் உங்களைப் பின் தொடர்கிறார்களா அல்லது உங்களைக் கடந்து செல்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
6.சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் ஏதேனும் தங்க நகைகளை அணிந்திருந்தால் மிகவும் கவனமாக இருங்கள்.
7.நீங்கள் வசிக்கும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது வந்து சுற்றித் திரிந்தால் அவர்கள் வரும் வாகனங்களின் இலக்க தகட்டு எண்கள் அவர்கள் வரும் திகதிகள் மற்றும் நேரங்களை குறித்துக் கொள்வது அல்லது அந்தச் சந்தர்ப்பங்களை அவர்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபையில் போனில் வீடியோ எடுப்பது குற்றங்களைத் தடுக்க நீங்கள் வழங்கக் கூடிய ஒரு சிறந்த சேவையாகும்.
8.பொதுமக்களாகிய உங்களிடம் தொழில் பெற்றுத் தருவதாக அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பவதாகக் கூறி சில நபர்கள் உங்களிடம் பணம் வாங்கக் கூடும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வோண்டாம்.
9.ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ் நிலையை நீங்கள் உணர்ந்தால், அந்தப் பகுதிவாசிகளாகிய உங்களை பின்வரும் தொலைபேசி எண்களில் உடனடியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் – தொ.இல: – 067-2221916, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – தொ.இல: 071-8592805 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்