உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மணவர் தமது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

16 வயதுடைய குறித்த மாணவன் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் மாணவரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்

Related posts

பிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்ட சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்

editor

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது