உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது உணவகங்களில் சுகாதார குறைபாடுகளை கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மேற்கொண்டனர்.

இதன்போது சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் தயாரிக்கப்பட்ட உணவுகள், மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள், உணவு சேமிப்பு மற்றும் தயாரிப்பு பகுதிகளில் காணப்பட்ட சுகாதாரமின்மை என பல பிரச்சினைகள் கண்டறியப்பட்டன.

இக்குறைபாடுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், வழக்குத் தாக்கல் செய்வதற்கான பணிகளும் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் போது சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள், பொது மக்களிடம் உணவகங்களில் உணவருந்தும் போது அங்குள்ள சுகாதார நிலையை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு ஏதேனும் சுகாதார குறைபாடுகள் கண்டால் உடனடியாக சுகாதார பிரிவுக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொண்டார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவிடமிருந்து டீசல் ஏற்றுமதி

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்

மஹிந்த சமரசிங்கவின் தூதுவர் பதவி – வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானம்

editor