உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருதில் “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் “சமுர்த்தி அபிமானி” வர்த்தக கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவைக் கட்டிட மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி கருத்திட்ட சிரேஷ்ட முகாமையாளர் எஸ்.றிபாயாவின் நெறிப்படுத்தலில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஜ.எல்.எஸ். ஹிதாயா, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.சர்பீன், கருத்திட்ட உதவியாளர் ஏ.ஆர்.எம். ஜாபிர், சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நெளஷாட், பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர் கே.எம்.கபீர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பல்வேறுபட்ட வர்த்தகர்கள் கலந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.

-நூருல் ஹுதா உமர்

Related posts

விவாகரத்து தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்த அனுமதி

திசைகாட்டிக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம் – இம்ரான் எம்.பி

editor

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு