பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இன்று (03) வாக்குமூலம் பெற்றுள்ளது.
அதன்படி, அந்தப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து 4 மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை போஸ்போட் நிறுவனத்தின் ஊடாக கடந்த காலகட்டத்தில் ஏற்றுமதிக்காக மூன்று நிறுவனங்களுக்கு முப்பதாயிரம் மெட்ரிக் டன் ரோக் பேஸ்பேட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2,700 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பதில் பணிப்பாளர் சுஜீவ விஜேசேனவின் அறிவுறுத்தலின் பேரில் முன்னெடுக்கப்படுகிறது.