உள்நாடு

சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை பற்றிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) –     சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை பற்றிய அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒன்லைன் முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

இலங்கையில் மர்ம காய்ச்சலால் இருவர் மரணம் -தீவிர சிகிச்சையில் பலர்!